கூலி படம்: 1421 எண்ணிற்கு அர்த்தம் என்ன தெரியுமா?

  தினத்தந்தி
கூலி படம்: 1421 எண்ணிற்கு அர்த்தம் என்ன தெரியுமா?

சென்னை, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171-வது படமாக 'கூலி' உருவாகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் சுருதி ஹாசன், சத்யராஜ், உபேந்திரா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.இதற்கிடையே, இப்படத்தில் இடம் பெற்றுள்ள கதாபாத்திரங்களை போஸ்டர் மூலம் அறிமுகம் செய்தார் லோகேஷ் கனகராஜ். அதன்படி , கூலி படத்தில் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா, நடிகை சுருதி ஹாசன், மலையாள நடிகர் சவுபின் சாஹிர், நடிகர் சத்யராஜ் மற்றும் நடிகர் உபேந்திரா, ரஜினிகாந்த் ஆகியோரின் போஸ்டர்களை படக்குழு பகிர்ந்து கதாபாத்திரங்களின் பெயர்களை வெளியிட்டது.இதில் 'தேவா' என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளார். அந்த போஸ்டரில் ரஜினியின் கையில் வைத்திருக்கும் பேட்ஜ் ஒன்றில் '1421' என்ற எண் இடம் பெற்றுள்ளது. அந்த எண் குறித்து எல்லாருக்கும் கேள்விகள் எழுந்துள்ளன. அதாவது, இந்த படம் முழுவதுமாக தங்க கடத்தலை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கிறது. அதில் 14 மற்றும் 21 என்பது தங்கத்தின் கேரட் மதிப்புகளை குறிப்பிடுவதாக தெரிகிறது. அதிலும், 14 கேரட் என்பது இந்தியா, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும், 21 கேரட் என்பது சவுதி உள்ளிட்ட அமீரக நாடுகளில் பயன்படுத்தப்படும் தங்கத்தின் மதிப்பை குறிப்பிடும் எண்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துபாய், கத்தார் போன்ற அமீரக நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அதிகளவில் தங்க கட்டிகள் கடத்தி வரப்படுவதால், இந்த எண் இடம் பெற்றிருக்க வாய்ப்புள்ளது.இந்த படத்தில் தங்க கட்டிகள், தங்கத்தால் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் தங்க கடிகாரங்கள் அதிகம் இடம் பெற்றுள்ளதால், போஸ்டரில் இந்த எண் இடம் பிடித்திருக்கிறது என்று உறுதியாக சொல்ல முடியாவிட்டாலும் ஓரளவு ஊகிக்க முடிகிறது.

மூலக்கதை