Harvinder Singh defeated Setiawan to reach the QF/பாரா ஒலிம்பிக்: வில்வித்தையில் இந்திய வீரர் காலிறுதிக்கு முன்னேறினார்
பாரீஸ்:பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.இதுவரை இந்தியா 3 தங்கம், 8 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 21 பதக்கங்களைக் கைப்பற்றி உள்ளது.இந்நிலையில், வில்வித்தை ரிகவர் ஆண்கள் பிரிவில் இந்தியாவின் ஹர்விந்தர் சிங் தகுதிச் சுற்றில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தேர்வானார்.தொடர்ந்து நடந்த காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஹர்விந்தர் சிங் 6-2 என்ற புள்ளிக் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதி போட்டி இன்று இரவு நடைபெறுகிறது.