இரண்டாம் ஆண்டாக தொடர்ச்சியாக ஆகஸ்டில் அதிக வெப்பநிலை

  தமிழ் முரசு
இரண்டாம் ஆண்டாக தொடர்ச்சியாக ஆகஸ்டில் அதிக வெப்பநிலை

பாரிஸ்: தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக உலக சராசரி வெப்பநிலை ஆகஸ்ட் மாதம் மிக அதிகமாக இருந்ததாக ஐரோப்பிய ஒன்றிய பருவநிலை கண்காணிப்பு அமைப்பின் புள்ளிவிவரங்கள் காட்டுவதாக ஏஎஃப்பி செய்தித் தகவல் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 3ஆம் தேதி) கூறியது. இதன் தொடர்பில் 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் சராசரி வெப்பநிலை குறித்து துல்லியமான தகவல் இல்லை என்றபோதிலும் ‘கோப்பர்னிக்கஸ் கிளைமெட் சேஞ் சர்விஸ்’ என்ற அமைப்பு 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத சராசரி வெப்பநிலையான 16.8 டிகிரி செல்சியசை விட அதிகமானது என்று உறுதி செய்துள்ளது. முன்னெப்போதும் இல்லாத இதுபோன்ற வெப்பநிலை பெரும்பாலும் மானிட செயல்களால் உருவாக்கப்பட்ட பருவநிலை மாற்றம் என்பதுடன் இதுவே அடிக்கடி தீவிர பருவநிலை தொடர்பான நிகழ்வுகளுக்கு காரணம் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆஸ்திரேலியா, ஜப்பான், பல சீன மாநிலங்கள், நார்வே நாட்டைச் சேர்ந்த ஸ்வால்பார்ட் ஆர்டிக் தீபகற்ப பகுதி ஆகியவை ஆகஸ்ட் மாதம் ஆக அதிக வெப்பநிலையை எதிர்கொண்டன என்று பல்வேறு பருவநிலை அமைப்புகள் கணித்துள்ளன.

மூலக்கதை