'தி கோட்' படத்தின் கடைசி அப்டேட் - ரிலீஸ் புரோமோ வெளியிட்ட படக்குழு
சென்னை,இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் , 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (தி கோட்) படத்தில் நடித்துள்ளார். விஜ்ய்யுடன், பிரசாந்த், பிரபுதேவா, யோகிபாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்பட பலர் நடித்துள்ளனர்.ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். டிஏஜிங் தொழில்நுட்பம் மூலம் விஜய் இளம் வயதில் தோன்றும் காட்சிகள் இருப்பதால் இப்படத்தின் மீது பெரியளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ரசிகர்கள் ஆர்வத்துடன் டிக்கெட் முன்பதிவு செய்துவருகின்றனர்.நடிகர் விஜய் கட்சி தொடங்கிய பின்னர் அவரது நடிப்பில் வெளியாகும் முதல் திரைப்படம் இதுவாகும். தி கோட் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் கடைசி அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, தி கோட் படத்தின் ரிலீஸ் புரோமோ வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு நாளை ஒருநாள் மட்டும் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.ANNE VARAR VAZHI VIDU #ThalapathyThiruvizha starts from Tomorrow #GOATReleasePromo ( Last update ❤️❤️ ) pic.twitter.com/KXLLLnKAKb