ரூ.66 கோடி வருமான வரி கட்டும் கோலி: 2-வது இடத்தில் டோனி- எவ்வளவு தெரியுமா?/ MS Dhoni Paid Rs 38 Crore Tax In 2023-24, Says Report. Virat Kohli Tops List Among Sportspersons

  மாலை மலர்
ரூ.66 கோடி வருமான வரி கட்டும் கோலி: 2வது இடத்தில் டோனி எவ்வளவு தெரியுமா?/ MS Dhoni Paid Rs 38 Crore Tax In 202324, Says Report. Virat Kohli Tops List Among Sportspersons

இந்திய விளையாட்டு வீரர்களில் அதிக தொகையை வருமான வரியாக செலுத்துவோரின் பட்டியல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இந்திய அணியின் சீனியர் வீரரான விராட் கோலி ரூ.66 கோடி வருமான வரி கட்டி வருவதாகவும், சிஎஸ்கே ஜாம்பவான் டோனி ரூ.38 கோடியை கட்டி வருவதும் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்தியா கிரிக்கெட் அணி வீரர்களுக்கு ஒரு மாதம் ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் 2 வாரங்களில் ஹோம் சீசன் தொடங்கவுள்ளது. வங்கதேசம் அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மூலமாக இந்திய அணி ஹோம் சீசனை தொடங்கவுள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் பலரும் பயிற்சியை தொடங்கியுள்ளனர்.இந்த நிலையில் இந்திய விளையாட்டு வீரர்களில் அதிக வருமான வரி செலுத்துவோரின் பட்டியலை ஃபார்சூன் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த வகையில் பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி முதலிடத்தில் இருக்கிறார். அவர் மொத்தமாக வருமான வரியாக மட்டும் ரூ.66 கோடி கட்டி வருகிறார். அதேபோல் 2-வது இடத்தில் 2020-ம் ஆண்டிலேயே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், சிஎஸ்கே அணிக்காக தொடர்ந்து விளையாடி வரும் டோனி இருந்து வருகிறார்.அவர் வருமான வரியாக மட்டும் ரூ.38 கோடி கட்டி வருகிறார். இந்த பட்டியலில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 3-வது இடத்தில் இருக்கிறார். அவர் மொத்தமாக ரூ.28 கோடியை வருமான வரியாகவும், இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி ரூ.23 கோடி வருமான கட்டுவதன் மூலமாக 4-வது இடத்திலும் இருக்கிறார்.அதேபோல் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ரூ.13 கோடியை வருமான வரியாகவும், விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ரூ.10 கோடியையும் வருமான வரியாக கட்டி வருகிறார். அதேபோல் சினிமா நட்சத்திரங்களுடன் ஒப்பிடும் போது விராட் கோலி 5-வது இடத்திலும், டோனி 7-வது இடத்திலும் இருக்கின்றனர். இந்த பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டாப் 20 இடங்களில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை