டி20 வரலாற்றில் பவர்பிளேயில் அதிக ரன்கள்- சாதனை படைத்த ஆஸ்திரேலியா/ Australia blazed through with 113/1 against Scotland, setting the highest powerplay score ever in T20I history
ஆஸ்திரேலிய அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஸ்காட்லாந்து சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய ஸ்காட்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் சேர்த்தது.இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 9.4 ஓவரில் 155 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டி20 கிரிக்கெட்டில் பவர் பிளேயில் அதிக ரன்கள் விளாசிய அணி என்ற வரலாற்று சாதனையை ஆஸ்திரேலிய அணி படைத்துள்ளது. டிராவிஸ் ஹெட் மற்றும் மிட்செல் மார்ஷ் ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் இந்த சாதனை படைக்கப்பட்டது. ஆஸ்திரேலிய அணி முதல் 6 ஓவரில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 113 ரன்கள் குவித்தது.5-வது ஓவரில் மிட்செல் மார்ஷ் 30 ரன்களும் 6-வது ஓவரில் டிராவிஸ் ஹெட் 26 ரன்களும் அதிகபட்சமாக குவித்தனர். குறிப்பாக ஹெட் 17 பந்தில் அரை சதம் விளாசினார்.