இரவில் மின் விளக்குகளை அணைத்த கிழக்கு மணிப்பூர் மக்கள்

  தமிழ் முரசு
இரவில் மின் விளக்குகளை அணைத்த கிழக்கு மணிப்பூர் மக்கள்

இம்பால்: மணிப்பூரின் கிழக்கு மாவட்டங்களில் பொதுமக்கள், இரவில் தங்கள் வீடுகளில் உள்ள மின் விளக்குகளை அணைத்துவிட்டதாகத் தெரிவித்தனர்.பலர் தங்கள் பகுதியில் உள்ள வான் பரப்பில் ஆளில்லா சிறிய ரக வானூர்திகளை (drone) பார்த்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவ்வாறு செய்ததாக கூறினர். அங்கு கலவரம் தீவிரம் அடைந்த நிலையில், அண்மையில் போராளிகளில் ஒரு தரப்பு, ட்ரோன்கள் மூலம் இப்பகுதியில் வெடிகுண்டுகளை வீசியது. அதனால்தான் பொதுமக்கள் இவ்வாறு கூறியதாகத் தெரிகிறது. இதற்கிடையே, போராளிகளை எச்சரிக்கும் விதமாக கிழக்கு மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் வான் நோக்கி துப்பாக்கிகளால் சுட்டனர்.இத்தகைய நடவடிக்கைகளால் மக்கள் மத்தியில் பதற்றம் மேலும் அதிகரித்து வருவதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே சுராசந்த்புர் மாவட்டத்தில், போராளிகள் அமைத்திருந்த மூன்று பதுங்கு குழிகளை அழித்துவிட்டதாக பாதுகாப்புப் படை தெரிவித்தது. பதற்றமான பகுதிகளில் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை