கர்நாடகாவில் 27 ஆயிரம் பேர் டெங்கி காய்ச்சலால் பாதிப்பு

  தமிழ் முரசு
கர்நாடகாவில் 27 ஆயிரம் பேர் டெங்கி காய்ச்சலால் பாதிப்பு

பெங்களூரு: கடந்த இரண்டு மாதங்களில் கர்நாடகாவில் டெங்கி காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது.வெள்ளிக்கிழமை வரையிலான நிலவரப்படி, அங்கு நடப்பாண்டில் டெங்கியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,189ஆக உயர்ந்துள்ளது என மாநில சுகாதாரத்துறை தெரிவிக்கிறது. கர்நாடகாவில் டெங்கி காய்ச்சல் தொற்று நோயாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதாரமற்ற வீடுகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. எனினும், கடந்த இரு மாதங்களில் டெங்கி காய்ச்சல் பரவலைத் தடுக்க முடியவில்லை. மாநிலத் தலைநகர் பெங்களூருவில் மட்டும் பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் டெங்கி காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை காய்ச்சலுக்கு 13 பேர் பலியாகிவிட்டனர். மாநில அரசு காய்ச்சல் பரவலைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.

மூலக்கதை