கட்சித் தலைவராக இல்லாவிட்டாலும் பணிகள் தொடரும்; பினாங்கு முதல்வர் சூளுரை

  தமிழ் முரசு
கட்சித் தலைவராக இல்லாவிட்டாலும் பணிகள் தொடரும்; பினாங்கு முதல்வர் சூளுரை

ஜார்ஜ்டவுன்: மலேசியாவின் ஜனநாயகச் செயல் கட்சியின் பினாங்கு கிளைத் தலைவர் பதவியிலிருந்து விலகியபோதிலும் பினாங்கு முதல்வராகத் தமது பணிகள் தொடரும் என்று சாவ் கூன் யாவ் உறுதி அளித்துள்ளார்.திரு சாவ்வின் நிர்வாகத்தைப் பினாங்கின் முன்னாள் முதல்வரும் ஜனநாயகக் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான திரு லிம் குவான் எங் மிகக் கடுமையாக விமர்சித்ததை அடுத்து, திரு சாவ் பதவி விலகுகிறார்.செப்டம்பர் 22ஆம் தேதியன்று நடைபெறும் கட்சித் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று செப்டம்பர் 4ஆம் தேதியன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் திரு சாவ் அறிவித்து அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தினார்.கட்சித் தேர்தல் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.கடந்த 25 ஆண்டுகளாக திரு சாவ் ஜனநாயகச் செயல் கட்சியின் தலைவராகப் பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.“பதவி விலக திரு சாவ் எடுத்துள்ள முடிவு பினாங்கு அரசாங்கத்தைப் பாதிக்காது. அடுத்த சட்டமன்றத் தேர்தல் வரை அவர் பினாங்கின் முதல்வராகப் பதவி வகிப்பார்,” என்று ஜனநாயகச் செயல் கட்சியின் தலைமைச் செயலாளர் ஆண்டனி லோக் சியூ ஃபூக் அறிக்கை வெளியிட்டார்.பினாங்கின் வளர்ச்சிக்காக அவர் வைத்திருக்கும் திட்டங்களை 65 வயது திரு சாவ் தொடர்ந்து நடைமுறைப்படுத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேம்படுத்தப்பட்ட மின்னிலக்கச் சேவைகள், பினாங்கு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது, பினாங்கின் பொருளியலை மேம்படுத்துவது முதலியவை அவற்றில் அடங்கும்.பினாங்கின் முதல்வராகத் திரு சாவ் 2018ஆம் ஆண்டில் பதவி ஏற்றார்.2023ஆம் ஆண்டில் அவர் மீண்டும் பினாங்கின் முதல்வராக நியமிக்கப்பட்டார்.அவரது பதவிக்காலம் அடுத்த மாநில சட்டமன்றத் தேர்தலுடன் நிறைவடைகிறது.பினாங்கின் அடுத்த சட்டமன்றத் தேர்தலை 2028ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் நடத்த வேண்டும்.

மூலக்கதை