மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு 407 புள்ளிகள் உயர்வு

  தினத்தந்தி
மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு 407 புள்ளிகள் உயர்வு

மும்பை,இந்திய பங்கு சந்தைகள் இன்று காலை லாபத்துடன் தொடங்கின. இதனால், பங்குகளை வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்து இருந்தது. அமெரிக்காவில் பணவீக்கம் மித அளவில் இருந்த நிலையில், சர்வதேச அளவில் அது எதிரொலித்தது. இதனால், இந்திய பங்கு சந்தைகள் இன்று ஏற்றத்துடன் காணப்பட்டன.இதன்படி, மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 407 புள்ளிகள் (0.5 சதவீதம்) உயர்ந்து 81,930.18 புள்ளிகளாக இருந்தது. இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 141.20 புள்ளிகள் (0.57 சதவீதம்) உயர்ந்து 25,059.65 புள்ளிகளாக காணப்பட்டது.இதில், உலோகம் மற்றும் பொது துறை வங்கிகள் 1.29 சதவீதம் (0.23 சதவீதம்) என்ற அளவில் லாபத்துடன் முன்னணியில் இருந்தன. ஆசிய பங்கு சந்தைகளிலும் வர்த்தகம் இன்று காலை லாபத்துடன் தொடங்கியது.ஜப்பானின் நிக்கி குறியீடு 2.7 சதவீதம் என்ற அளவில் வலுவாக இருந்தது. தைவானின் பங்கு சந்தையில் 3 சதவீதத்திற்கும் கூடுலான லாப நிலை காணப்பட்டது. தென்கொரியாவின் கே.ஓ.எஸ்.பி.ஐ. குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் குறியீடு ஆகியனவும் லாபத்துடன் காணப்பட்டன.

மூலக்கதை