ஒரே நாளில் 1000 மிஸ்டு கால்.. பிரேக் அப் ஆகியும் காதலனை டார்ச்சர் செய்த எக்ஸ் காதலிக்கு சிறை!-1000 missed calls in a single day.. Break up and torture the X girlfriend of the boyfriend jailed!

  மாலை மலர்
ஒரே நாளில் 1000 மிஸ்டு கால்.. பிரேக் அப் ஆகியும் காதலனை டார்ச்சர் செய்த எக்ஸ் காதலிக்கு சிறை!1000 missed calls in a single day.. Break up and torture the X girlfriend of the boyfriend jailed!

பிரிட்டனில் பிரேக் அப் ஆகியும் முன்னாள் காதலனை விடாமல் தொல்லை செய்துவந்த பெண்ணுக்கு சிறை தண்டனை-0 விதிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. நர்ஸ் வேலை பார்க்கும் சோபி கால்வில் [Sophie Colwill] என்ற 30 வயது பெண்ணை டேவிட் பாக்லீரோ [David Pagliero] என்ற 54 வயது பல் மருத்துவர் தனது மனைவி இறப்புக்கு பின்னர் காதலித்து வந்துள்ளார். ஆனால் சமீபத்தில் இருவருக்கும் இடையில் காதல் முறிவு ஏற்பட்டதால் சோபி மிகுந்த மன வருத்தத்தில் இருந்துள்ளார். காதலனை இழக்க விரும்பாத சோபி, பிரேக் அப் ஆன அடுத்த நாளே டேவிட்டின் செல் போனுக்கு 1000 முறை போன் செய்துள்ளார். ஆனால் டேவிட் போனை எடுக்காமல் தவிர்த்துள்ளார். மேலும் டேவிட் எங்கெல்லாம் செல்கிறார் என்பதை கண்காணிக்க அவரது காரில் டிராக்கிங் டிவிஸ் பொறுத்தியுள்ளார் சோபி. இது பத்தாது என்று டேவிட்டின் வீட்டை உடைத்துக்கொண்டு உள்ளே அவர் வரும்வரை வம்படியாக பெட்ரூமில் வெயிட் செய்துள்ளார். டேவிட் வந்ததும் அவரின் போனை பிடுங்கும் முயற்சியில் அவருடன் சண்டை போட்டுவிட்டு ஜன்னல் வழியே குதித்து தப்பியுள்ளார். சோபியின் இந்த அடாவடித்தனமான தொல்லைகளை தாங்க முடியாமல் மன உளைச்சலில் டேவிட் சோபி தன்னை தொடர்ந்து பின் தொடர்வதால் தான் பாதுகாப்பின்றி உணர்வதாகவும் தனக்கு அச்சுறுத்தலாக இருப்பதாவதும் டேவிட் அளித்த புகாரின் பேரில் போலீசார் சோபியை கைது செய்தனர். வீட்டை உடைத்து உள்ளே சென்றது உள்ளிட்ட குற்றங்கள் நிரூபணமானதால் சோபிக்கு 1 வருட சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அக மொத்தம் சிப்பு நடித்த வல்லவன் படத்தில் ரீமா சென் நடித்திருந்த கீதா கதாபாத்திரத்தை ரியல் லைபில் வாழ்ந்திருக்கிறார் சோபி.

மூலக்கதை