death sentence for insulting Prophet Muhammad / நபிகள் நாயகத்தை இழிவுபடுத்திய நபருக்கு மரண தண்டனை

  மாலை மலர்
death sentence for insulting Prophet Muhammad / நபிகள் நாயகத்தை இழிவுபடுத்திய நபருக்கு மரண தண்டனை

சமூக ஊடகங்களில் முகமது நபியை அவமதித்ததற்காக பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த இர்பான் என்ற நபருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. லாகூரிலிருந்து 200 கிமீ தொலைவில் உள்ள சராய் ஆலம்கிர் என்ற இடத்தில் வசிக்கும் இர்பான், இந்தாண்டு சமூக வலைத்தளங்களில் நபிகள் நாயகத்திற்கு எதிராக அவதூறான கருத்துக்களை வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.நீதிமன்றம் இர்பானுக்கு மரண தண்டனை விதித்ததுடன் இந்திய மதிப்பில் சுமார் 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது.இஸ்லாம் மதத்தின் கடைசி இறைதூதரான முகமது நபியை அவமதிப்பது பாகிஸ்தானில் மரண தண்டனைக்குரிய குற்றமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை