யாகி புயலில் சிக்கி 74 பேர் பலி/74 people were killed in Cyclone Yagi
பிலிப்பைன்சில் உருவான யாகி புயல் வியட்நாம், வடக்கு தாய்லாந்து, லாவோஸ் ஆகிய நாடுகளை தாக்கியது. இதில் வியட்நாமில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. அங்கு 200-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.இந்தநிலையில் யாகி புயல் மியான்மர் நாட்டை தாக்கியது. புயல் காரணமாக மியான்மரில் இடைவிடாமல் கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளம், நிலச்சரிவுகள் ஏற்பட்டது. இதில் ஏராளமானோர் சிக்கி உயிரிழந்தனர்.இந்த நிலையில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 74 பேர் பலியாகி உள்ளதாகவும், 80-க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.அங்கு சிக்கியுள்ளவர் களை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நாட்டின் மத்தியப் பகுதிகளிலும், கிழக்கு ஷான் மாநிலத்திலும், தலைநகரான நய்பிடாவிலும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.புயல்-வெள்ளம் காரணமாக சுமார் 2.40 லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர். நாட்டின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் வெள்ளத்தால் 24 பாலங்கள், 375 பள்ளி கட்டிடங்கள், ஒரு புத்த மடாலயம், 5 அணைகள், 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக ராணுவம் தெரிவித்தது.மியான்மரில் ராணுவ ஆட்சி நடந்து வரும் நிலையில் வெள்ள மீட்பு நடவடிக்கைகளுக்கு வெளிநாடு உதவ வேண்டும் என்று ராணுவம் கோரிக்கை விடுத்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு மீட்பு மற்றும் நிவாரண உதவிகளைப் பெறுவதற்கு வெளிநாடு களைத் தொடர்பு கொள்ளு மாறு அதிகாரிகளுக்கு ராணுவம் அறிவுறுத்தி உள்ளது.