தமிழ்நாட்டுக்கு அண்ணா ஆற்றிய பணிகளை போற்றி மகிழ்வோம் - த.வெ.க. தலைவர் விஜய்
சென்னை,தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாதுரையின் 116-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாட்டுக்கு அவர் ஆற்றிய பணிகளை என்றென்றும் போற்றி மகிழ்வோம் என்றும் தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய் கூறியுள்ளார்.இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "சுயமரியாதைத் திருமணங்களைச் சட்டப்பூர்வமாக்கியது, 'மதராஸ் மாநிலம்' என்ற பெயரைத் 'தமிழ்நாடு' என மாற்றியது, தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையைச் செயல்படுத்தியது என்று தமிழக அரசியல் களத்தில் புதிய வரலாறு படைத்த பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளில், அவர் தமிழ்நாட்டுக்கு ஆற்றிய பணிகளை என்றென்றும் போற்றி மகிழ்வோம்" என்று தெரிவித்துள்ளார்.pic.twitter.com/00FSr6j1JI