நடிகர் அஜித்துடன் இயக்குனர் நெல்சன் மற்றும் கவின்
சென்னை,நடிகர் கவின் தற்போது இயக்குனர் நெல்சன் தயாரிப்பில் உருவாகியுள்ள 'பிளடி பெக்கர்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் நடிகர் கவின், அஜித் மற்றும் நெல்சனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதனுடன், 'மை டியர் தல' என்றும் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். மகிழ்த்திருமேனி இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகி உள்ளது. அதேபோல், திக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' படத்திலும் அஜித் நடித்து வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.And this happened... :) #MyDearThala ♥️ pic.twitter.com/xzEita9967