கார்த்தியின் 29-வது படத்தை இயக்கும் 'டாணாக்காரன்'பட இயக்குனர்

  தினத்தந்தி
கார்த்தியின் 29வது படத்தை இயக்கும் டாணாக்காரன்பட இயக்குனர்

சென்னை,கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. காதல், கமர்ஷியல், ஆக்சன் மற்றும் வரலாற்று சிறப்பு வாய்ந்த திரைப்படங்களில் கார்த்தி நடித்திருக்கிறார். பொன்னியின் செல்வன், விருமன், சர்தார் ஆகிய திரைப்படங்களின் வெற்றிக்கு பிறகு தனது 25 வது படமான ஜப்பான் திரைப்படத்தில் நடித்தார். இத்திரைப்படம் கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. ராஜூமுருகன் படத்தை இயக்கியிருந்தார். இப்படம் அதிகளவில் வரவேற்பை பெறவில்லை.26-வது திரைப்படமாக நலன் குமாரசாமி இயக்கத்தில் வா வாத்தியார் படத்தில் நடித்துள்ளார், அதேபோல, கார்த்தியின் 27 வது படத்தை '96'படத்தை இயக்கிய பிரேம் குமார் இயக்கி இருக்கிறார். மெய்யழகன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் அரவிந்த் சாமி, ஸ்ரீதிவ்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இப்படம் வரும் 27-ம் தேதி திரைக்கு வருகிறது.அதனைத்தொடர்ந்து, கார்த்தி 'சர்தார் 2' படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் கார்த்தியின் 29-வது படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை 'டாணாக்காரன்' பட இயக்குனர் தமிழ் இயக்க உள்ளார். அடுத்த ஆண்டு இப்படம் வெளியாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.A new chapter begins with #Karthi29! We're excited to bring this special film to life, starring the incredible @Karthi_Offl! More surprises await! ✨#Karthi @directortamil77 @prabhu_sr @B4UMotionPics @ivyofficial2023 #IshanSaksena @RajaS_official @SunilOfficial pic.twitter.com/yBeluLxIzo

மூலக்கதை