அடுத்தடுத்து சர்ச்சைகள்.. நாளை காலை முதல்வரை சந்திக்கும் தொல் திருமாவளவன்.. / Thirumavalavan to meet CM MK Stalin tomorrow

  மாலை மலர்
அடுத்தடுத்து சர்ச்சைகள்.. நாளை காலை முதல்வரை சந்திக்கும் தொல் திருமாவளவன்.. / Thirumavalavan to meet CM MK Stalin tomorrow

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் மது ஒழிப்பு மாநாடு அறிவித்தது, அதன் பிறகு கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பாக அவர் பேசிய பழைய வீடியோ வெளியிடப்பட்டு, பிறகு அது டெலீட் செய்யப்பட்டது போன்ற சம்பவங்கள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.மேலும், திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து விரைவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி விலகி விடும் என்பது போன்ற கருத்துக்கள் பேசு பொருளாக காரணமாக அமைந்துள்ளன. தொல் திருமாவளவனின் சமீபத்திய அறிவிப்புகள் மற்றும் பேச்சுக்களுக்கு திமுக தலைவர்கள் விளக்கம் அளித்து வருகின்றனர். இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளன் நாளை காலை 11 மணி அளவில் தமிழக முதல்வர் முக ஸ்டாலினை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்திய செயல்பாடுகள் சர்ச்சையானதைத் தொடர்ந்து திருமாவளவன் மற்றும் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

மூலக்கதை