DMK Announced Social Justice Day Pledge- சமூக நீதி நாள் உறுதிமொழி: திமுக அறிவிப்பு
பெரியார் பிறந்தநாளான 17ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது.அன்றைய தினம், சமத்துவம் சகோதரத்துவம். சமதர்ம கொள்கைகளுக்காக என்னை நான் ஒப்படைத்துக்கொள்வேன்' என உறுதிமொழி ஏற்குமாறும் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக பெரியாரின் பிறந்ததாள் மூகநீதி நாள கடைபிடிக்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் 2021ல் அறிவித்திருந்தார்.இதுகுறித்து திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-தந்தை பெரியார் பிறந்த நாள் "சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு" தலைமைக் கழகம் அறிவிப்பு "தந்தை பெரியாரின் ஒவ்வொரு பிறந்த நாளும் "சமூகநீதி நாளாக" கடைபிடிக்கப்படும் என்றும், அப்பிறந்த நாள் அன்று "சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்க வேண்டும்" என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 6.9.2021 அன்று சட்டப்பேரவையில் அறிவித்ததற்கிணங்க, தந்தை பெரியார் பிறந்த நாளான 17.9.2024 அன்று காலை 10.30 மணி அளவில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள அறிஞர் அண்ணா முத்தமிழறிஞர் கலைஞர் சிலை முன்பு, கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் "சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு" நிகழ்ச்சி நடைபெறும். இதில் சென்னை வடக்கு, சென்னை வடகிழக்கு, சென்னை கிழக்கு, சென்னை மேற்கு, சென்னை தென்மேற்கு, சென்னை தெற்கு ஆகிய மாவட்டக் கழகச் செயலாளர்கள் கலந்து கொள்கின்றனர். இந்நிகழ்ச்சியில் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட, பகுதி, வட்டக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைத்து அணி நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் தவறாது சுலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தந்தை பெரியார் பிறந்த நாள் "சமூக நீதி நாள் உறுதிமொழி" இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.