Vaiko says There is no one Tharkuri like Governor Ravi- ஆளுநர் ரவி போல் ஒரு தற்குறி யாரும் இல்லை என்றார் வைகோ

  மாலை மலர்
Vaiko says There is no one Tharkuri like Governor Ravi ஆளுநர் ரவி போல் ஒரு தற்குறி யாரும் இல்லை என்றார் வைகோ

தமிழ்நாட்டில் உள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி போல் தமிழ்நாட்டில் தற்குறி யாரும் இல்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ காட்டமாக தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் PhD படிப்பில் தரம் இல்லை என ஆளுநர் ரவி கூறியது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பதில் அளித்துள்ளார்.சென்னை தேனாம்பேட்டை காமராஜனர் அரங்கில் வைகோ பேட்டி அளித்தார்.அப்போது மேலும் அவர் கூறியதாவது:-தினமும் எதையாவது உளறுகிறார் ஆளுநர் ரவி.. இதைப்போல் மோசமான ஆளுநர் எந்த மாநிலத்திலும் இருந்ததில்லை. ஆர்.என்.ரவியை போல தற்குறி யாரும் கிடையாது.முன்னாள் ஆளுநரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினோம். இந்த ஆளுநரை எதிர்த்து போராட்டம் நடத்துவோம்.திமுகவுக்கு மதிமுக எப்போதும் உறுதுணையாக இருக்கும். மது ஒழிப்பு போராட்டத்தை மதிமுகவை போல் மற்ற எந்த கட்சிகளும் நடத்தியதில்லை.ஜனநாயகத்தில் கருத்து சொல்வதற்கு இடம் உண்டு என்ற வகையில் திருமாவளவன் கருத்து கூறியிருக்கிறார்.விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்க மதிமுகவுக்கு திருமாவளவன் அழைப்பு விடுத்தால் அது குறித்து யோசிப்போம்.கோவை அன்னபூர்ணா உணவக உரிமையாளர் அவமதிக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.முதலீடுகள் ஈர்ப்பு தொடர்பாக எதிர்க்கட்சிகள் அரசியலுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை குற்றம்சாட்டுகின்றனர். ஈர்க்கப்பட்ட முதலீடு குறித்து முதலமைச்சர் தெளிவாக கூறிவிட்டார். வெள்ளை, மஞ்சள் அறிக்கை தேவையில்லாதது.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூலக்கதை