மத்திய நிதியமைச்சரின் புள்ளிவிவர மோசடி: காங்கிரஸ் தாக்கு

  தமிழ் முரசு
மத்திய நிதியமைச்சரின் புள்ளிவிவர மோசடி: காங்கிரஸ் தாக்கு

சென்னை: கோவைக்கு வருகைபுரிந்த ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முத்ரா கடன் வழங்கியிருப்பது குறித்து ஆதாரமற்ற புள்ளி விவரங்களை வெளியிட்டிருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், 140 கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டின் நிதியமைச்சர் பொறுப்புமிக்க பதவியில் அமர்ந்து கொண்டு அடிப்படை ஆதாரமே இல்லாமல் தொழில் முனைவோர்கள் கூட்டத்தில் ஒரு புள்ளிவிவர மோசடியை நிகழ்த்தியிருப்பதை ஏற்க இயலாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.“தமிழகத்தின் மக்கள் தொகை ஏறத்தாழ 8 கோடி பேர் என்று வைத்துக்கொண்டால் அதில் 5.6 கோடி பேருக்கு கடன் வழங்கி உள்ளதாகவும் கோவையில் 35 லட்சம் பேர் வசிக்கும்போது அதில் 20 லட்சம் பேருக்கு முத்ரா கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார் நிர்மலா சீதாராமன். “அங்கே கூடியிருந்த எவராலும் நம்பவும் முடியவில்லை, ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை,” என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.கடன்களை முறையாக வழங்கியிருந்தால் நாட்டில் தொழிற்சாலைகள் பெருகியிருக்கும் என்றும் தொழில்முனைவோர்கள் அதிகரித்திருப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, நிர்மலா சீதாராமனின் கூற்று உண்மைக்குப் புறம்பான, அபத்தமான கருத்து என்றும் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

மூலக்கதை