வசூலில் 100 கோடியை கடந்த நானியின் சூரியாஸ் சாட்டர்டே Nani's Surya's Saturday Crosses 100 Crore Collection

  மாலை மலர்
வசூலில் 100 கோடியை கடந்த நானியின் சூரியாஸ் சாட்டர்டே Nanis Suryas Saturday Crosses 100 Crore Collection

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் நானி. அண்மையில் சூர்யாஸ் சாட்டர்டே என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை விவேக் ஆத்ரேயா இயக்கியுள்ளார். இவரது இயக்கத்தில் இதற்கு முன் அண்டே சுந்தரனிகி என்ற படத்தில் நானி நடித்துள்ளார்.சூர்யாஸ் சாட்டர்டே படத்தின் முன்னணி பெண் கதாப்பாத்திரத்தில் பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இப்படத்தில் பெண் காவல் அதிகாரியாக , சாருலதா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடித்துள்ளார். டிவிவி எண்டர்டெயின்மண்ட் படத்தை தயாரிக்க ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். திரைப்படம் கடந்த 29 ஆம் தெதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.தமிழிலும் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. திரைப்படம் உலகளவில் வசூலில் 100 கோடி ரூபாயை கடந்துள்ளது. நானி நடித்த திரைப்படங்களில் மேலும் ஒரு மகுடம் சூடும் விதமாக இப்படம் அமைந்துள்ளது.உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

மூலக்கதை