CPI-M protest announcement against the Sri Lankan government- இலங்கை அரசை கண்டித்து சிபிஐ-எம் போராட்டம் அறிவிப்பு

  மாலை மலர்
CPIM protest announcement against the Sri Lankan government இலங்கை அரசை கண்டித்து சிபிஐஎம் போராட்டம் அறிவிப்பு

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு விடுதலையான தமிழக மீனவர்களை மொட்டை அடித்து திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.தலா ரூ.50,000 அபராதம் செலுத்தியதால் மீனவர்கள் விடுதலை செய்யப்பட்ட நிலையில், 5 மீனவர்களை மொட்டை அடித்து இலங்கை அரசு அனுப்பியுள்ளது.இதைக்கண்டித்து, ராமேஸ்வரம் மீனவர்கள் இதையடுத்து, இலங்கை அரசை கண்டிக்கும் விதத்தில் தங்கச்சிமடம் வலசை பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும், இலங்கை அரசின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த மீனவர்கள் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினர்.இந்நிலையில், கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களுக்கு மொட்டையடித்து திருப்பி அனுப்பி வைத்த இலங்கை அரசைக் கண்டித்து செப்.20ம் தேதி ராமேஸ்வரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.மேலும், இலங்கை அரசின் அராஜக போக்கிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.இலங்கையை கண்டித்தும், மீனவர் பிரச்சனையில் பாராமுகமாக உள்ள மத்திய அரசையும் கண்டித்து ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

மூலக்கதை