நாற்காலி ஆசையை சாமர்த்தியமாக மோடியிடம் கூறியுள்ளார் நிதின் கட்கரி - இந்தியா கூட்டணி தாக்கு-Nitin Gadkari has hinted at his desire for a chair to Modi - India will attack the alliance
மகாராஷ்டிராவில் நேற்றைய தினம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பிரதமர் ஆகும் வாய்ப்பு தனக்கு இருந்ததாகவும் ஆனால் அதற்கு தான் விரும்பவில்லை என்றும் தெரிவித்திருந்தார். அவர் கூறியதாவது, எதிர்க்கட்சியைச் சேர்ந்த முக்கிய அரசியல் தலைவர் ஒருவர் பிரதமர் வேட்பாளர் பதவிக்கு விரும்பினால் என்னை ஆதரிப்பதாகத் தெரிவித்தார். அந்த வாய்ப்பை ஏற்க மறுத்து நிராகரித்துவிட்டேன். பிரதமர் பதவி எனது லட்சியம் அல்ல. நான் ஒரு சித்தாந்தத்தையும் நம்பிக்கையையும் பின்பற்றுபவன் என்று அந்த தலைவரிடம் கூறினேன். அவற்றில் நான் சமரசம் செய்ய மாட்டேன் என்று அவரிடம் உறுதியாகக் கூறினேன் என்று தெரிவித்திருந்தார்.இதன்மூலம் நிதின் கட்கரி தனது நாற்காலி ஆசையை சாமர்த்தியமாக மோடியிடம் வெளிப்படுத்தி உள்ளார் என்று இந்தியா கூட்டணியை சேர்ந்த தலைவர் விமர்சித்துள்ளார். இந்தியா கூட்டணியில் உள்ள உத்தவ் தாக்கரே சிவசேனா அணி தலைவர் பிரியங்கா சதுர்வேதி, இந்தியா கூட்டணியில் நாட்டை ஆளும் திறன் உடைய பல தலைவர்கள் இருக்கின்றனர். எனவே நிதின் கட்கரி தனது மனதில் இருக்கும் நாற்காலி ஆசையை எதிர்க்கட்சிகளைச் சாக்காக வைத்து மோடிஜியிடம் கூறியுள்ளார். எங்களிடமே பல தகுதி வாய்ந்த தலைவர்கள் இருக்கும்போது பாஜகவில் இருந்து கடன் வாங்க வேண்டிய அவசியம். Well played நிதின் ஜி என்று விமர்சித்துள்ளார்.