துலீப் கோப்பை: 186 ரன்களில் வெற்றி பெற்று இந்தியா ஏ அணி அசத்தல் / Duleep Trophy India A Won by 186 Runs
இந்தியாவில் உள்நாட்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடரான துலீப் கோப்பை இரண்டாம் கட்ட போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா ஏ மற்றும் இந்தியா டி அணிகள் மோதின. போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா ஏ அணி 290 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அடுத்து வந்த இந்தியா டி அணி 183 ரன்களுக்கு சுருண்டது.இதைத் தொடர்ந்து 2 ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா ஏ அணி 380 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்தது. இதைத் தொடர்ந்து 487 எனும் கடின இலக்கை துரத்திய இந்தியா டி அணி துவக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்தியா டி அணிக்கு ரிக்கி புய் 113 ரன்களையும், அதன்பிறகு களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் தன் பங்கிற்கு 41 ரன்களையும், சஞ்சு சாம்சன் 40 ரன்களையும் எடுத்தனர். அதன் பிறகு களமிறங்கியவர்களில் சௌரப் குமார் 22 ரன்களையும், ஹர்ஷித் ராணா 24 ரன்களையும் எடுத்தனர். இந்தியா ஏ அணிக்கு பந்துவீச்சில் மிரட்டிய தனுஷ் கொடியன் 4 விக்கெட்டுகளையும், ஷாம்ஸ் முலானி 3 விக்கெட்டுகளையும், கலீல் அகமது மற்றும் ரியான் பராக் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.