ரத்தான இண்டிகோ விமானம்: பயணிகள் கடும் கோபம்

  தமிழ் முரசு
ரத்தான இண்டிகோ விமானம்: பயணிகள் கடும் கோபம்

மும்பை: மும்பையில் இருந்து தோஹாவுக்கு இயக்கப்படும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், பல மணி நேர தாமதத்துக்குப் பிறகு ரத்தானதால் பயணிகள் பெரும் அவதிக்கு ஆளாகினர்.இதையடுத்து, கடும் கோபம் அடைந்த பல பயணிகள், விமான நிலைய ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை அடுத்து, அவர்களுக்கு தங்குவிடுதிகள், சிற்றுண்டி ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டதாக ஊடகச்செய்தி தெரிவிக்கிறது. மும்பையில் இருந்து கத்தார் தலைநகர் தோஹாவுக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானச்சேவை வழங்கி வருகிறது.மும்பையில் இருந்து காலை 3.55 மணிக்குப் புறப்படும் அந்த விமானம், காலை 5 மணியளவில் தோஹா சென்றடையும். இந்நிலையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அந்த விமானம் மும்பையில் இருந்து புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் விமானம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துவதாக இண்டிகோ நிறுவன செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். பயணிகள் சென்றடைய வேண்டிய நகரங்களில் அவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் மாற்றுத்தேதிகளில் மீண்டும் பயணச்சீட்டு பதிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

மூலக்கதை