20 ஆண்டுகளாக அதே ஜாக்பாட் எண்களை வாங்கி வந்தவருக்கு அடித்தது யோகம்

  தமிழ் முரசு
20 ஆண்டுகளாக அதே ஜாக்பாட் எண்களை வாங்கி வந்தவருக்கு அடித்தது யோகம்

ஆடவர் ஒருவர் 20 ஆண்டுகளாகத் தொடர்ந்து வாங்கி வந்த அதே ‘ஜாக்பாட்’ எண்கள், அவருக்கு ஒரு மில்லியன் வெள்ளியை ஈட்டித்தந்துள்ளன.அமெரிக்காவின் மாசசூசெட்சைச் சேர்ந்த தாமஸ் என்ஸ்கோ, கடந்த ஜூன் 12ஆம் தேதி தமது பரிசுத் தொகையைப் பெற்றுக்கொண்டார்.ஆடவரது பிறந்தநாளை அடிப்படையாகக் கொண்ட அதிர்ஷ்ட எண்களை, ஆடவரிடம் விற்ற கடைக்கு $10,000 போனஸ் தொகை வழங்கப்பட்டது.‘மெகா மில்லியன்ஸ்’ என்ற லாட்டரி குலுக்கல் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளிலும் வெள்ளிக்கிழமைகளிலும் நடத்தப்படும். வாஷிங்டன், வெர்ஜின் ஐலண்ட்ஸ் ஆகியவற்றுடன் 45 மாநிலங்களில் இது நடத்தப்பட்டு வருகிறது.இதற்கிடையே, லாட்டரியில் பரிசு விழுவது ஆடவரின் குடும்பத்திற்கு ஒன்றும் புதிதல்ல.அவரின் மனைவிக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு மில்லியன் வெள்ளி கிட்டியதாம்.இந்நிலையில், பரிசுத்தொகையைத் தம்முடைய பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுடன் பகிர்ந்துகொள்ள என்ஸ்கோ திட்டமிட்டுள்ளார்.‘யுஎஸ்ஏ டுடே’ வெளியிட்ட தகவலின்படி இவ்வாண்டு இரண்டு பேர் மட்டுமே இதுவரை ‘மெகா மில்லியன்ஸ்’ ஜாக்பாட் தொகையை வென்றுள்ளனர். பலருக்கும் குறைந்த தொகையே கிடைத்து வந்துள்ளது.

மூலக்கதை