எஃப் 3 கார் பந்தயத்தில் போட்டியிட இருக்கும் முதல் சிங்கப்பூரர்

  தமிழ் முரசு
எஃப் 3 கார் பந்தயத்தில் போட்டியிட இருக்கும் முதல் சிங்கப்பூரர்

எஃப் 1 கார் பந்தயம் இம்மாதம் சிங்கப்பூரில் களைகட்ட இருக்கிறது.இந்நிலையில், எஃப் 3 கார் பந்தயத்தில் சிங்கப்பூரின் 17 வயது கிறிஸ்டியன் ஹோ போட்டியிட இருப்பதாக செப்டம்பர் 16ஆம் தேதியன்று அறிவிக்கப்பட்டுள்ளது.எஃப் 3 பந்தயத்தில் போட்டியிடும் முதல் சிங்கப்பூரர் எனும் பெருமை கிறிஸ்டியனைச் சேரும்.எஃப் 1 பந்தயத்தில் போட்டியிடும் இலக்கைக் கொண்டுள்ள கிறிஸ்டியன், அதற்கு முன்னதாக எஃப் 3 பந்தயத்தில் களமிறங்க இருக்கிறார்.அவர் எந்த எஃப் 3 அணியில் சேருவார் என்று இன்னும் தெரியவில்லை.இதுதொடர்பாக கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.எஃப் 3 கார் பந்தயம் இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோன், மொனாக்கோவின் ஸ்திரீட் சர்க்கீட், ஆஸ்திரியாவில் உள்ள ரெட் புல் ரிங் போன்ற புகழ்பெற்ற பந்தயத் தடங்களில் நடைபெறும்.“அடுத்த ஆண்டு எஃப் 3 பந்தயத்தில் போட்டியிட மிகுந்த ஆவலுடன் இருக்கிறேன். எஃப் 4 , யூரோகப்-3 ஆகிய பந்தயங்கள் மூலம் திறன்களை வளர்த்துக்கொண்டேன். அந்தப் பந்தயங்களில் எனக்குக் கிடைத்த அனுபவங்கள் எனக்குக் கைகொடுக்கும்,” என்றார் கிறிஸ்டியன்.

மூலக்கதை