இந்தியில் பிளாக்பஸ்டரான 'கில்' ரீ-மேக்கில் ராகவா லாரன்ஸ்/ raghava lawrence in Hindi blockbuster 'Kill' re-make
தமிழ் சினிமாவில் நடிப்பு, நடனம், படம் இயக்குவது போன்ற பல துறைகளில் ஜொலித்து கொண்டு இருப்பவர் ராகவா லாரன்ஸ். இவர் பல சிறந்த படங்களை இயக்கியும் நடித்தும் உள்ளார். இந்நிலையில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் அவரது 25- வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.அதன்படி இந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படமான கில், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரீமேக் செய்யப்பட உள்ளது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக இருக்கும் இந்த படத்தில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளார்.இந்த படத்தை தெலுங்கில் ராக்ஷசடு, கில்லாடி படங்களை இயக்கிய தெலுங்கு இயக்குனர் ரமேஷ் வர்மா இயக்கவுள்ளார்.ஏ ஸ்டூடியோஸ் எல்எல்பி சார்பில் கோனேரு சத்யநாராயணா, நீலாத்ரி புரொடக்ஷன்ஸ் மற்றும் ஹவ்விஷ் புரொடக்ஷன்ஸுடன் இணைந்து தயாரிக்கிறார். சத்யநாராயணாவும் ரமேஷ் வர்மாவும் இணையும் 3-வது படம் இது.மிகப்பெரிய ஆக்ஷன் அட்வென்சர் ஆரம்பம்' என்ற போஸ்டருடன் படக்குழு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு நவம்பர் முதல் தொடங்கும் என கூறப்படுகிறது.இந்தியில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதால் ரீமேக்கிலும் நல்ல வரவேற்பு பெரும் என எதிர்பாக்கப்படுகிறது.உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.