லெபனானில் வெடித்துச் சிதறிய பேஜர் கருவிகள்; ஒன்பது பேர் மரணம், பலர் காயம்
பெய்ரூட்: லெபனானில் உள்ள பல பகுதிகளில் பேஜர் கருவிகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டன.பேஜர் கருவிகள் வெடித்ததில் குறைந்தது ஒன்பது பேர் மாண்டனர். செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி நிகழ்ந்த இத்தாக்குதலில் கிட்டத்தட்ட 2,750 பேர் காயமடைந்ததாக லெபனானிய சுகாதார அமைச்சர் ஃபிராஸ் அபியாட் தெரிவித்தார்.காயமடைந்தோரில் 200 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அவர் கூறினார்.தாக்குதலில் ஹிஸ்புல்லா போராளிகள் பலரும் லெபனானுக்கான ஈரானியத் தூதரும் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.காயம் அடைந்த ஹிஸ்புல்லா போராளிகளில் பலர் அந்த அமைப்பின் மூத்த அதிகாரிகளின் மகன்கள் என்று தெரியவந்துள்ளதுமாண்டோரில் ஒருவர் லெபனானிய நாடாளுமன்ற உறுப்பினரும் ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்தவருமான திரு அலி அம்மரின் மகன் என்று தெரிவிக்கப்பட்டது.இத்தாக்குதலை இஸ்ரேல் நடத்தியதாக ஹிஸ்புல்லா குற்றம் சாட்டியுள்ளது.இதற்குத் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என அது சூளுரைத்தது.“ஒட்டுமொத்த நாட்டையே குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது,” என்று ஹிஸ்புல்லா அதிகாரி உசேன் கலில் தெரிவித்தார்.லெபனானை உலுக்கியுள்ள இத்தாக்குதல் தொடர்பாக இஸ்ரேல் கருத்து தெரிவிக்கவில்லை.ஒருவரோடு ஒருவர் தொடர்புகொள்ள ஹிஸ்புல்லா பேராளிகளும் லெபனானில் உள்ள பலரும் பேஜர் கருவிகளைப் பயன்படுத்துவதாக அந்நாட்டின் தகவல்துறை அமைச்சர் ஸியாட் மகாரி கூறினார்.பேஜர் கருவிகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்தார்.காஸா மீது இஸ்ரேல் 2023ஆம் ஆண்டிலிருந்து தாக்குதல் நடத்தி வருகிறது.ஹமாஸ் அமைப்புக்கும் பாலஸ்தீனர்களுக்கும் ஆதரவாக இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தியது.இந்நிலையில், இந்த மோதல் தொடங்கியதிலிருந்து செப்டம்பர் 17ஆம் தேதியன்று நிகழ்ந்த இத்தாக்குதல், ஹிஸ்புல்லா அமைப்பைப் பாதித்துள்ள மிக மோசமான பாதுகாப்பு அத்துமீறல் என்று பெயர் குறிப்பிட விரும்பாத ஹிஸ்புல்லா அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.