41 ஆண்டு ஏக்கம் தீர்ந்தது; வில்லா அதிரடி

  தமிழ் முரசு
41 ஆண்டு ஏக்கம் தீர்ந்தது; வில்லா அதிரடி

பெர்ன்: இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் காற்பந்துக் குழுவான ஆஸ்டன் வில்லா, 41 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் (புசிஎல்) போட்டியில் பங்கேற்கிறது. 41 ஆண்டு ஏக்கத்தைத் தீர்க்கும் வகையில் இப்பருவத்தின் சாம்பிய்ன்ஸ் லீக் போட்டியில் தனது முதல் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தின் யங் பாய்ஸ் குழுவை 3-0 எனும் கோல் கணக்கில் வென்றது வில்லா. இந்த ஆட்டம் சுவிட்சர்லாந்துத் தலைநகர் பெர்னில் செவ்வாய்க்கிழமையன்று (செப்டம்பர் 17) நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமையன்று (செப்டம்பர் 16) வில்லாவின் முன்னாள் தாக்குதல் ஆட்டக்காரர் கேரி ‌ஷோ உயிரிழந்தார். 63 வயதான அவர், கீழே விழுந்து காயமுற்றதால் மரணமடைந்தார்.‌ஷோக்கு மரியாதை செலுத்தும் வகையில் யங் பாய்ஸ் குழுவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெறுமாறு வில்லா நிர்வாகி யூனாய் எமரி தனது அணியை ஊக்குவித்தார். ‌1982ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் போட்டி இறுதியாட்டத்தில் வில்லா, ஜெர்மனியின் பயர்ன் மியூனிக்கை வென்று கிண்ணத்தை வென்றது. அந்தக் குழுவில் முக்கிய வீரராக இருந்தவர் ‌ஷோ.யங் பாய்சுக்கு எதிரான ஆட்டத்தில் வில்லாவை முன்னுக்கு அனுப்பினார் யூரி டீலமன்ஸ். ‌ஜேக்கப் ரேம்சி, அமாடு ஒனானா ஆகியோர் வில்லாவின் மற்ற இரண்டு கோல்களைப் போட்டனர்.சாம்பியன்ஸ் லீக்கில் மற்றோர் இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் குழுவான லிவர்பூல், இத்தாலியின் ஏசி மிலானை 3-1 எனும் கோல் கணக்கில் வென்றது.புதிய நிர்வாகி ஆர்ன ஸ்லொட்டின்கீழ் இப்பருவத்தை சிறப்பாகத் தொடங்கியது லிவர்பூல். ஆனால், கடந்த பிரிமியர் லீக் ஆட்டத்தில் நோட்டிங்ஹம் ஃபாரஸ்ட்டிடம் எதிர்பாரா வகையில் தோல்வியடைந்த அக்குழு, மிலானுக்கு எதிராக அசத்தியது.

மூலக்கதை