பார்ன்ஸ்லியைப் பந்தாடிய மான்செஸ்டர் யுனைடெட்

  தமிழ் முரசு
பார்ன்ஸ்லியைப் பந்தாடிய மான்செஸ்டர் யுனைடெட்

லண்டன்: இங்கிலிஷ் லீக் கிண்ண காற்பந்துப் போட்டியில் பார்ன்ஸ்லிக்கு எதிரான ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் கோல் மழை பொழிந்தது.செப்டம்பர் 17ஆம் தேதியன்று நடைபெற்ற இந்த மூன்றாவது சுற்று ஆட்டத்தில் 7-0 எனும் கோல் கணக்கில் யுனைடெட் வாகை சூடியது.யுனைடெட்டுக்காக மார்கஸ் ரேஷ்ஃபர்ட், ஆண்டனி, அலெஜான்ரோ கர்னாச்சோ, கிறிஸ்டியன் எரிக்சன் ஆகியோர் கோல் போட்டனர்.பார்ன்ஸ்லி குழுவுக்காக மத்தியத் திடல் ஆட்டக்காரரான 18 வயது விமல் யோகநாதன் களமிறங்கினார்.இவர் இங்கிலாந்தில் தொழில்முறை காற்பந்தாடும் முதல் ஈழத் தமிழர்.மற்றோர் ஆட்டத்தில் சவுத்ஹேம்டனிடம் எவர்ட்டன் 6-5 எனும் கோல் கணக்கில் (பெனால்டி ஷுட்அவுட்) தோற்றது.அந்த ஆட்டம் 1-1 எனும் கோல் கணக்கில் முடிந்ததை அடுத்து, வெற்றியாளரை நிர்ணயிக்க பெனால்டி ஷுட்அவுட் நடத்தப்பட்டது.மற்றோர் ஆட்டத்தில் இரண்டாம் நிலை லீக்கில் போட்டியிடும் பிரெஸ்டன் குழுவிடம் பிரிமியர் லீக்கில் போட்டியிடும் ஃபுல்ஹம் அதிர்ச்சித் தோல்வி அடைந்தது.ஆட்டம் சமநிலையில் முடிந்ததை அடுத்து, வெற்றியாளரை நிர்ணயிக்க பெனால்டி ஷுட்அவுட் நடத்தப்பட்டது.இதுவே லீக் கிண்ணப் போட்டி வரலாற்றில் பதிவாகியுள்ள ஆக நீண்ட பெனால்டி ஷுட்அவுட்.16-15 எனும் கோல் கணக்கில் ஃபுல்ஹம் குழு தோல்வியின் பிடியில் சிக்கி போட்டியிலிருந்து வெளியேறியது.

மூலக்கதை