18 மணிநேரம் இடைவிடாது வேலை.. களைப்பில் பைக்கிலேயே உயிரிழந்த நபர்- China Delivery Agent, 55, Dies While Resting On Bike After Working 18-Hour Days

  மாலை மலர்
18 மணிநேரம் இடைவிடாது வேலை.. களைப்பில் பைக்கிலேயே உயிரிழந்த நபர் China Delivery Agent, 55, Dies While Resting On Bike After Working 18Hour Days

சீனாவில் தொடர்ந்து 18 மணிநேரம் உணவு டெலிவரி வேலை பார்த்துவிட்டு களைப்பில் பைக்கிலேயே தூங்கியபோது 55 வயதுடைய நபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பைக்கிலேயே அவர் சடலமாக கிடந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதால் இந்த துயர சம்பவம் தெரியவந்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் கிழக்கு சீனாவில் உள்ள ஹாங்ஷோவில் நடைபெற்றுள்ளது. உயிரிழந்தவரின் பெயர் யுவான். யுவான் இடைவிடாமல் செய்த வேலைக்காரணமாக ஒரு நற்பெயரை பெற்றுள்ளார். இவரை "ஆர்டர் கிங்" என்று அன்பாக அழைப்பார்கள். யுவானின் மறைவு குறித்து அறிந்த பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒருவர், 'ஆர்டர் கிங்' விழுந்துவிட்டார். உண்மையில் இந்த அவலங்களைத் தவிர்க்க வழி இல்லையா?" என்றும் மற்றொருவர், "அவர் தனது 50 களில், தனது குடும்பத்தின் ஒரே ஆதாரமாக இருந்தார், இரவும் பகலும் உழைத்து, அவர் நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும். அவரது அடுத்த வாழ்க்கையில், அவர் இதுபோன்ற காலத்தை எதிர்த்து ஓட வேண்டியதில்லை" என்றும் கருத்து தெரிவித்து இருந்தனர்.இந்த சம்பவம் நாடு முழுவதும் டெலிவரி செய்பவர்களின் நலன் மற்றும் சட்ட உரிமைகள் பற்றிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை