ரசிகர் மன்றம் தொடங்கி என்ன செய்யப்போகிறார்கள்? - அரவிந்த் சாமி / What are they going to do after starting a fan club? - arvind swamy
96 பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் மெய்யழகன். 'கார்த்தியின் 27'-வது படமான இந்த படத்தை சூர்யா- ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது.இப்படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அண்மையில் படத்தின் டீசர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகிறது.இந்நிலையில், நேர்காணலில் பேசிய அரவிந்த் சாமி, "மாநாடு படத்தில் நடிகர் எஸ். ஜே. சூர்யா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கத் தேர்வாகி பின் படப்பிடிப்புக்கான சரியான நேரம் கிடைக்காததால் அப்படத்தில் எஸ். ஜே. சூர்யா இணைந்தார் என்று தெரிவித்தார்.ரசிகர் மன்றங்கள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அரவிந்த சாமி, "எனக்கு ரசிகர் மன்றம் தொடங்கி என்ன செய்யப்போகிறார்கள்? ரசிகர்களுக்கு அது பயனுள்ளதாக இருக்குமா? நான் சினிமாவைவிட்டு விலகினால் அவர்கள் என்ன செய்வார்கள்? என்ற கேள்விகள் எனக்குள் உண்டு. என் மகன் ஒரு நடிகரின் ரசிகர் மன்றத்தில் சேர வேண்டும் என்று சொன்னால் நான் அதை ஊக்குவிக்க மாட்டேன், அப்படி இருக்கும் பட்சத்தில் என் மகனுக்கு ஒரு அட்வைஸ், ஊரார் மகனுக்கு ஒரு அட்வைஸ்-ஐ என்னால் எப்படித் தர முடியும்?" உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.