Sir movie trailer release / சார் படத்தின் டிரைலர் வெளியீடு
போஸ் வெங்கட் தற்பொழுது விமல் நடிப்பில் சார் என்ற படத்தை இயக்கியுள்ளார்.இப்படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் வழங்குகிறது. இத்திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சார் திரைப்படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இப்படத்தின் ட்ரைலரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் மிஷ்கின் மற்றும் நடிகர் ஆர்யா அவர்களது எக்ஸ் பக்கத்தில் இன்று வெளியிட்டனர். ட்ரைலரில் படிப்புக்கு முக்கியவதும் கொடுக்கும் வசனங்கள் கவனம் ஈர்த்துள்ளது. குறிப்பாக 'ஆசிரியர்னா என்னனு தெரியுமா.. 'ஆசு' னா தப்பு, 'இரியன்'னா திருத்துவன் என்ற வசனமும் நா சொல்லிக்கொடுக்கணும்னு தைரியமா இங்க வந்து நிக்கறது உங்கள மாத்துறதுக்கு இல்ல உங்க சந்ததியை மாத்தறதுக்கு... மானமும் அறிவும் தான் மனுசனுக்கு அழகு' போன்ற வசனங்கள் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.#SIR Trailer is here Link : https://t.co/jeU1tn7ugtProduced: @pictures_sss @sirajsfocussDirector: @DirectorBosePresented by : @GrassRootFilmCoRelease by : @mynameisraahul pic.twitter.com/qrVgctfbyk