ஆலியா பட் நடித்துள்ள 'லவ் அண்ட் வார்' படத்தின் ரிலீஸ் குறித்த தகவல்
மும்பை, நடிகை ஆலியா பட் இந்தி சினிமாவில் 2012-ல் 'ஸ்டூடண்ட் ஆப் தி இயர்' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் தற்போது முக்கியமான நடிகையாக வலம் வருகிறார். இவர் நடிகர் ரன்பீர் கபூரை கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு ராஹா எனும் பெண் குழந்தை உள்ளது.இவர்கள் இருவரும் இணைந்து சஞ்சய் லீலா பஞ்சாலி இயக்கத்தில் 'லவ் அண்ட் வார்' என்ற படத்திலும் நடித்துள்ளனர். இந்த படத்தில் விக்கி கவுசல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பஞ்சாலி மற்றும் ரன்பீர் கபூர் 17 ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் இப்படத்திற்காக இணைந்துள்ளனர். மேலும், கங்குபாய் கத்தியவாடி வெற்றிக்குப் பிறகு பஞ்சாலி மீண்டும் ஆலியா பட் உடன் இணைந்துள்ளார்.இப்படம் முன்னதாக கடந்த ஜனவரி மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் 2025-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது இயக்குனர் சஞ்சய் லீலா பஞ்சாலி, இப்படம் வருகிற 2026-ம் ஆண்டு மார்ச் 20-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவித்துள்ளார். இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது.