'Future CM Thirumavalavan' - VCK Thondargal chant / 'வருங்கால முதல்வர் திருமாவளவன்' - விசிக தொண்டர்கள் கோஷம்

  மாலை மலர்
Future CM Thirumavalavan  VCK Thondargal chant / வருங்கால முதல்வர் திருமாவளவன்  விசிக தொண்டர்கள் கோஷம்

விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ள மது ஒழிப்பு மாநாடும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையும் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து திமுக கூட்டணியில் இருந்து விசிக விலகுகிறதா என்று கேள்வி எழுந்தது. ஆனால் திமுக கூட்டணியில் தான் விசிக உள்ளதாக திருமாவளவன் விளக்கம் அளித்திருந்தார்.இன்று கோவை விமான நிலையத்திற்கு விசிக தலைவர் திருமாவளவன் வந்தபோது, தொண்டர்கள் அவரை வரவேற்கும்விதமாக, "வருங்கால முதல்வர் அண்ணன் திருமாவளவன்" என கோஷமிட்டனர். இந்த கோஷம் அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை