அரியானா தேர்தல்: பெண்களுக்கு மாதம் ரூ.2000.. இலவச மின்சாரம் - காங்கிரசின் வாக்குறுதிகள்-Haryana Election: Rs.2000 per month for women.. Free electricity - Congress promise
அரியானா சட்டசபை தேர்தல் அக்டோபர் 5ம் தேதி ஒரேகட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 8ம் தேதி அரியானா சட்டசபைத் தேர்தல் அக்டோபர் 5ம் தேதி ஒரேகட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 8ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.அரியானாவில் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடை பெற உள்ளது. ஆட்சியைத் தக்கவைக்க ஆளும் பாஜகவும் நாற்காலியை கைப்பற்ற வியூகம் வகுத்து வருகிறது. மேலும் அண்டை மாநிலமான பஞ்சாபில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மியும் தனியாக களமிறங்கியுள்ள நிலையில் கடுமையான போட்டியாக மாறி உள்ளது. இந்தநிலையில் மக்களைக் கவரும் அம்சங்கள் அடங்கிய தனது தேர்தல் வாக்குறுதிகளைக் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் வைத்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், அரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா, அரியானா காங்கிரஸ் தலைவர் உதய் பன் உள்ளிட்டோர் முன்னிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்த அறிவிப்புகளை வெளியிட்டார்.அதன்படி, பெண்களுக்கு மாதம் ரூ.2000, விவசாயிகளின் கோரிக்கை விடுத்திருந்தபடி, பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்ட உத்தரவாதம், சாதிவாரி கணக்கெடுப்பு, கிரீமி லேயரின் வருமான வரம்பை ரூ. 6 லட்சத்திலிருந்து ரூ. 10 லட்சமாக உயர்த்துவது, சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதியோர், ஊனமுற்றோர் மற்றும் விதவைகளுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக ரூ. 6,000, அரசு ஊழியர்களுக்குப் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல், வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம், ரூ. 25 லட்சம் வரை இலவச மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட 7வாக்குறுதிகளைக் காங்கிரஸ் அறிவித்துள்ளது. இந்த முக்கிய உத்தரவாதங்களைத் தவிர, கட்சியின் 53 பக்க தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள பிற வாக்குறுதிகள் குறித்து சண்டிகரில் விரிவாக விளக்கப்படும் என்று கார்கே செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.हरियाणा के लिए 7 वादे-पक्के इरादे ?महिलाओं को शक्ति ✅ हर महीने 2,000 रुपए ✅ 500 रुपए में गैस सिलेंडर? सामाजिक सुरक्षा को बल✅ 6,000 रुपए बुढ़ापा पेंशन✅ 6,000 रुपए दिव्यांग पेंशन✅ 6,000 रुपए विधवा पेंशन✅ पुरानी पेंशन बहाल होगी? युवाओं को सुरक्षित भविष्य✅ 2… pic.twitter.com/9VGquAEWAf