சீனாவில் ஜப்பானிய மாணவிக்கு கத்திக்குத்து
ஷென்ஷென்: சீனாவின் ஷென்ஷென்னில் செப்டம்பர் 18ஆம் தேதி ஜப்பானிய மாணவி ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார். ஷென்ஷென்னில் உள்ள ஜப்பானிய பள்ளிக்கு அம்மாணவி சென்றுகொண்டிருந்தபோது கத்தியால் குத்தப்பட்டதாக ஜப்பானிய அமைச்சரவை துணைச் செயலாளர் ஹிரோஷி மொரியா விளக்கினார்.மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாணவியின் உடல்நிலை குறித்து தகவல் இல்லை. சந்தேக நபரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர் என்று மொரியா கூறினார்.அண்மைய மாதங்களாக சீனாவில் உள்ள ஜப்பானியர்கள் தாக்கப்பட்டு வருகின்றனர். இதனால் சீனாவில் உள்ள ஜப்பானியர்கள் கவலை அடைந்துள்ளனர்.சுஷோவில் ஜூனில் நடைபெற்ற மற்றொரு சம்பவத்தில் ஜப்பானிய பெண்ணும் அவரது குழந்தையும் கத்தியால் குத்தப்பட்டனர்.