Ticket Sales Details of IND-BAN 1st Test- இந்தியா- வங்கதேசம் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிக்கெட் விற்பனை

  மாலை மலர்
Ticket Sales Details of INDBAN 1st Test இந்தியா வங்கதேசம் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிக்கெட் விற்பனை

இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 19-ந் (நாளை) தேதி தொடங்குகிறது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கான இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், இந்தியா- வங்கதேசம் அணிகள் இடையேயான டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி, இந்தியா- வங்கதேசம் இடையேயான டெஸ்ட் போட்டி நடைபெறும் ஒவ்வொரு நாளுக்கும் தனித்தனியாக பயன்படுத்தும் வகையில், டிக்கெட்டுகள் விற்கப்படுகிறது.அதன்படி, டிக்கெட்டுகள் தினமும் காலை 7 மணிக்கு கவுன்டரில் பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.F,G,H அப்பர் ஸ்டாண்ட் வரிசையில் தலா ஒரு டிக்கெட் ரூ.200க்கு விற்பனை செய்யப்படுகிறது.I,J,K லோயர் ஸ்டாண்ட் வரிசையில் தலா ஒரு டிக்கெட் ரூ.400க்கு விற்பனை செய்யப்படுகிறது.KMK டெர்ரேஸ் வரிசையில் தலா ஒரு டிக்கெட் ரூ.1000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மூலக்கதை