புயல் பாதிப்பு: மியன்மாருக்கு 32 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா

  தமிழ் முரசு
புயல் பாதிப்பு: மியன்மாருக்கு 32 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா

புதுடெல்லி: யாகி புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மியன்மாருக்கு ‘ஆபரேஷன் சத்பவ்’ திட்டத்தின்கீழ் இரண்டாவது கட்டமாக 32 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பி வைத்துள்ளது இந்தியா.இதில் ஜெனரேட்டர், தற்காலிக கூடாராங்கள், சூரிய விளக்குகள் உள்ளிட்ட அத்தியாவசிய நிவாரண பொருள்களும் அடங்கும் எனத் தெரிவித்துள்ளதுபிலிப்பீன்சில் உருவான யாகி புயல் வியட்நாம், வடக்கு தாய்லாந்து, லாவோஸ் ஆகிய நாடுகளை தாக்கியது. இந்தப் புயலால் வியட்நாமில் 200 பேருக்கு மேலும் மியன்மாரில் வெள்ளம் நிலச்சரிவில் சிக்கி 74 பேரும் உயிரிழந்தனர்.புயலால் பாதிக்கப்பட்ட அரசாங்கங்களுக்கும் அந்நாட்டு மக்களுக்கும் இந்தியா இரங்கல் தெரிவித்தது. இதனிடையே, புயலால் பாதிக்கப்பட்ட மியன்மார், வியட்நாம், லாவோஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு ‘ஆபரேஷன் சத்பவ்’ திட்டத்தின் மூலம் இந்தியா நிவாரணப் பொருள்களை அனுப்பி வைத்துள்ளது.

மூலக்கதை