ராணுவ நடவடிக்கையில் பணய கைதிகள் 20 பேர் மீட்பு- பயங்கரவாதிகள் 4 பேர் பலி- Nigerian troops kill four bandits, rescue 20 hostages in anti-terror operations

  மாலை மலர்
ராணுவ நடவடிக்கையில் பணய கைதிகள் 20 பேர் மீட்பு பயங்கரவாதிகள் 4 பேர் பலி Nigerian troops kill four bandits, rescue 20 hostages in antiterror operations

அபுஜா:ஆப்பிரிக்க நடானா நைஜீரியாவின் வடமேற்கு கடூனா மாகாணத்தில் பயங்கரவாதிகள் கும்பல் செயல்பட்டு நாட்டின் அமைதிக்கு எதிராக சதி திட்டம் தீட்டி வருகிறது. அந்த வகையில் அங்குள்ள கிராமத்திற்குள் பயங்கரவாதிகள் கும்பல் ஊடுருவியது. பின்னர் அங்குள்ள குடிசைகளை தீயிட்டு கொளுத்தியதுடன் கிராமத்தை சேர்ந்த பெண்கள், சிறுமிகள் உள்பட 20 பேரை பணய கைதிகளாக கடத்தி சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த நைஜீரியா ராணுவம் பயண கைதிகளை மீட்க சிறப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அந்தவகையில் தனிப்படை ராணுவத்தினர், பயங்கரவாதிகள் தங்கியிருந்த இடத்தை சுற்றி வளைத்து அதிரடி தாக்குதல் நடத்தி் பணய கைதிகளாக கடத்தி வைக்கப்பட்டிருந்த 20 பேரை உயிருடன் மீட்டனர். ராணுவத்தினரின் இந்த நடவடிக்கையில் பயங்கரவாதிகள் 4 பேர் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையானதாக அந்த நாட்டின் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.

மூலக்கதை