ஐபிஎல் ஏலம் நவம்பரில் வெளிநாட்டில் நடைபெற வாய்ப்பு/ IPL auction likely to be overseas in November

  மாலை மலர்
ஐபிஎல் ஏலம் நவம்பரில் வெளிநாட்டில் நடைபெற வாய்ப்பு/ IPL auction likely to be overseas in November

புதுடெல்லி:இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சீசன் 18-க்கான ஏலம் நவம்பரில் 3-வது அல்லது 4-வது வாரத்தில் நடத்தப்படும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஏலம் துபாயில் நடந்ததை போலவே, இந்த முறையும் வெளிநாடுகளில் ஏலம் நடத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. வளைகுடா நகரமான தோஹா அல்லது அபுதாபியில் நடத்தப்படலாம் என தெரியவந்துள்ளது. மேலும் சமீப காலமாக கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளில் அதிக முதலீடுகளை செய்து வரும் சவுதி அரேபியாவும் ஏலத்தை நடத்த ஆர்வமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இடம் குறித்து எந்த தெளிவான தகவலும் இல்லை.தக்கவைப்பு விதிகள் இந்த மாத இறுதியில் அறிவிக்கப்படலாம். அதாவது ஏலத்திற்கான திட்டத்தைச் செய்ய அணிகளுக்கு இரண்டு மாதங்கள் இருக்கும். அணிகள் தங்கள் தக்கவைப்பை அறிவிப்பதற்கான காலக்கெடு நவம்பர் 15-க இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை