உலக சாதனையை சமன் செய்த கமிந்து மென்டிஸ் Kamindu Mendis Equal Pakistan Star Shaud Shakeel's World Record

  மாலை மலர்
உலக சாதனையை சமன் செய்த கமிந்து மென்டிஸ் Kamindu Mendis Equal Pakistan Star Shaud Shakeels World Record

காலே:இலங்கை - நியூசிலாந்து அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலே மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 106 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது களம் புகுந்த கமிந்து மென்டிஸ் நிலைத்து நின்று ஆடி அணியை சிக்கலில் இருந்து மீட்டார். அவருக்கு குசல் மென்டிஸ் (50 ரன்) நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இதனால் தனது 4-வது சதத்தை நிறைவு செய்த கமிந்து மென்டிஸ் 114 ரன்களில் (173 பந்து, 11 பவுண்டரி) கேட்ச் ஆனார். ஆட்ட நேரம் முடிவில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 88 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 302 ரன்கள் சேர்த்துள்ளது. கமிந்து மெண்டிஸ் சதம் விளாசியதன் 147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் 7 டெஸ்ட் போட்டிகளில் 50-க்கு அதிகமான ரன்களை குவித்த 2-வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன் கடந்த ஆண்டு, பாகிஸ்தானின் சவுத் ஷகீல் தனது முதல் ஏழு டெஸ்டிலும் 50-க்கும் அதிகமான ஸ்கோரை அடித்த முதல் டெஸ்ட் வீரர் ஆனார்.இதற்கு முன், இந்தியாவின் சுனில் கவாஸ்கர் , பாகிஸ்தானின் சயீத் அகமது , மேற்கிந்தியத் தீவுகளின் பசில் புட்சர் மற்றும் நியூசிலாந்தின் பெர்ட் சட்க்ளிஃப் ஆகியோர் தங்களின் முதல் ஆறு டெஸ்டிலும் தலா அரை சதம் அடித்தனர்.

மூலக்கதை