India win its 7th consecutive round/செஸ் ஒலிம்பியாட் 2024: 7-வது சுற்றிலும் இந்தியா வெற்றி
புடாபெஸ்ட்:45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்து வருகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியில் இன்று அரங்கேறிய 7-வது சுற்றில் இந்திய பெண்கள் அணி, ஜார்ஜியாவை சந்தித்தது.இதில் வந்திகா அகர்வால், வைஷாலி ஆகியோர் ஜார்ஜியா வீராங்கனைகளை தோற்கடித்தனர்.இறுதியில் இந்தியா 3-1 என்ற புள்ளி கணக்கில் ஜார்ஜியாவை வீழ்த்தி தொடர்ந்து 7-வது வெற்றியை ருசித்தது. இதன்மூலம் 14 புள்ளிகள் பெற்றுள்ளது.இதேபோல் இந்திய ஆண்கள் பிரிவில் குகேஷ், சீனாவின் வெய் யீயை தோற்கடித்தார். மற்ற வீரர்கள் டிரா செய்தனர். இதையடுத்து, இந்திய ஆண்கள் அணியும் 14 புள்ளிகள் பெற்றுள்ளது.