அரசு விரைவு பஸ்சில் திடீர் புகை- பயணிகள் அலறியடித்து ஓட்டம், government express bus in Dindivan was suddenly filled passengers

  மாலை மலர்
அரசு விரைவு பஸ்சில் திடீர் புகை பயணிகள் அலறியடித்து ஓட்டம், government express bus in Dindivan was suddenly filled passengers

திண்டிவனம்:சென்னையில் இருந்து நெய்வேலிக்கு அரசு விரைவு பஸ் 18-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தது. திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் பஸ் நிறுத்தம் அருகே வரும் போது திடீரென என்ஜினீனில் புகை வெளியேறியது.புகையானது பஸ் முழுவதும் பரவிய நிலையில் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அலறி அடித்துக் கொண்டு பஸ்சை விட்டு கீழே இறங்கினர். பின்னர் பயணிகள் மாற்று பஸ் மூலம் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டனர்.இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மூலக்கதை