பாமக: அனைத்து அர்ச்சகர்களையும் கருவறைக்குள் அனுமதிக்க வேண்டும்

  தமிழ் முரசு
பாமக: அனைத்து அர்ச்சகர்களையும் கருவறைக்குள் அனுமதிக்க வேண்டும்

சென்னை: ‘அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம்’ திட்டத்தின்படி பிற்படுத்தப்பட்ட பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் கோவில்களில் அர்ச்சகராக நியமிக்கப்பட்டு வருகின்றனர். இருந்தும் அவர்கள் கருவறைகளில் நுழைய, அங்கு ஏற்கெனவே பணியில் உள்ள அர்ச்சகர்கள் அனுமதிக்க மறுக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸ், நியமிக்கப்பட்ட 24 அர்ச்சகர்களில் 10 பேர் அர்ச்சனை செய்வதற்குப் பதிலாகக் கோவிலைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறையிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இதில் அரசு தலையிட்டு, ‘அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம்’ திட்டத்தின்படி நியமிக்கப்பட்ட அர்ச்சகர்கள் கருவறைக்குள் அனுமதிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

மூலக்கதை