புதிய உச்சத்தில் இந்திய பங்குச்சந்தை
மும்பை,இந்திய பங்குச்சந்தை இம்மாத தொடக்கத்தில் கடும் சரிவை சந்தித்தது. அதன்பின்னர், இந்திய பங்குச்சந்தை உயரத்தொடங்கியது. இந்நிலையில், இந்திய பங்குச்சந்தை இன்று புதிய உச்சத்துடன் வர்த்தகமாகி வருகிறது. அதன்படி, சுமார் 250 புள்ளிகள் உயர்ந்த நிப்டி 25 ஆயிரத்து 692 என்ற புள்ளிகளில் புதிய உச்சம் தொட்டு வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், சுமார் 500 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 53 ஆயிரத்து 556 என்ற புள்ளிகளில் புதிய உச்சம் தொட்டது.சுமார் ஆயிரம் புள்ளிகள் வரை உயர்ந்த சென்செக்ஸ் 84 ஆயிரத்து 159 என்ற புள்ளிகளில் புதிய உச்சம் தொட்டது. அதேபோல், சுமார் 230 புள்ளிகள் உயர்ந்த பின் நிப்டி 24 ஆயிரத்து 637 என்ற புள்ளிகளில் புதிய உச்சம் தொட்டது.அதேவேளை, சுமார் 600 புள்ளிகள் வரை உயர்ந்த பேங்க் எக்ஸ் 60 ஆயிரத்து 650 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. மேலும், 22 புள்ளிகள் வரை உயர்ந்த மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 100 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இந்திய பங்குச்சந்தை புதிய உச்சம் தொட்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.