மேம்பாலத் தூண்மீது தூக்கி வீசப்பட்ட இளம்பெண் (காணொளி)

  தமிழ் முரசு
மேம்பாலத் தூண்மீது தூக்கி வீசப்பட்ட இளம்பெண் (காணொளி)

நொய்டா: மோட்டார்சைக்கிளில் சென்ற பெண் ஒருவர், கார் மோதி மேம்பாலச் சாலையைத் தாங்கும் தூண்மீது தூக்கி வீசப்பட்டார்.இச்சம்பவம் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் சனிக்கிழமை (செப்டம்பர் 21) நிகழ்ந்தது. அவரைக் காப்பாற்ற நினைத்து, ஆடவர் இருவர் அத்தூணில் இறங்கினர். பின்னர் காவல்துறையினரும் தீயணைப்புப் படையினரும் இணைந்து செயல்பட்டு, அம்மூவரையும் பத்திரமாக மீட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அந்த இளம்பெண் நொய்டாவிலிருந்து காஸியாபாத் நோக்கிச் சென்றபோது இவ்விபத்து நேர்ந்ததாகக் காவல்துறை உயரதிகாரி மணீஷ் குமார் மிஸ்ரா தெரிவித்தார்.“அந்த இளம்பெண் ஸ்கூட்டியில் சென்றுகொண்டிருந்தபோது, கார் மோதியதில் மேம்பாலச் சாலைத் தூண்மீது தூக்கி எறியப்பட்டார். அவர்மீது மோதிய கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது,” என்று மிஸ்ரா விளக்கினார். அப்பெண்ணைக் காப்பாற்ற முயன்ற ஆடவரில் ஒருவரான ஜனருல் கூறுகையில், “பாலத் தூணில் அப்பெண் விழுந்ததைக் கண்டதும் அவரை மீட்க முயன்றோம். பின்னர் காவல்துறை எங்களை மீட்டது,” என்றார்.

மூலக்கதை