தகாத வார்த்தை பயன்படுத்தியதற்காக வெர்ஸ்டாப்பனுக்குத் தண்டனை

  தமிழ் முரசு
தகாத வார்த்தை பயன்படுத்தியதற்காக வெர்ஸ்டாப்பனுக்குத் தண்டனை

ஃபார்முலா ஒன் (F1) கார் பந்தய நட்சத்திரமான மேக்ஸ் வெர்ஸ்டாப்பனுக்குப் ‘பொதுமக்களின் அக்கறைக்கு ஏற்ற பணி’களைச் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.சிங்கப்பூரில் நடைபெற்றுவரும் எஃப்1 பந்தயத்தை முன்னிட்டு கடந்த வியாழக்கிழமை (செப்டம்பர் 19) நடந்த செய்தியாளர் கூட்டத்தில் தகாத வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக வெர்ஸ்டாப்பனுக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எஃப் பந்தயங்களை நிர்வகிக்கும் எஃப்ஐஏ சம்மேளனம் அவருக்கு அந்த தண்டனையை விதித்தது.செய்தியாளர் கூட்டத்தில் பதிவான ஒலிவட்டைப் போட்டுக் கேட்டபோது வெர்ஸ்டாப்பன் தகாத வார்த்தை பயன்படுத்தியதை எஃப்1 பணியாளர்கள் அறிந்தனர். வெர்ஸ்டாப்பன், தனது காரை வருணிக்கப் பயன்படுத்திய வார்த்தை பிறர் தவறாக எடுத்துக்கொள்ளக்கூடிய ஒன்றாகப் பார்க்கப்படுவதோடு அது எஃப்ஐஏ விதிமுறைகளை மீறும் சொல்லாகவும் வகைப்படுத்தப்பட்டது.தண்டனையின்படி அவர் எத்தகைய பணிகளை மேற்கொள்ளவேண்டும் என்பது தெரிவிக்கப்படவில்லை. ‘ரெட் புல்’லைப் பிரதிநிதித்து எஃப்1 பந்தயங்களில் போட்டியிடும் 26 வயது வெர்ஸ்டாப்பன், சம்பந்தப்பட்ட வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டார் என்று எஃப்1 பணியாளர்கள் கூறினர்.சென்ற வார இறுதியில் அஸர்பைஜானில் நடைபெற்ற கிராண்ட் பிரி பந்தயத்தில் தனது காரின் நிலை மோசமாக இருந்ததாக வெர்ஸ்டாப்பன் தகாத வார்த்தையைக் கொண்டு விளக்கியதாக தி அத்லெட்டிக் ஊடகம் தெரிவித்தது. நெதர்லாந்தைச் சேர்ந்த வெர்ஸ்டாப்பன், அண்மைக் காலமாக எஃப்1 பந்தயங்களில் சற்று சிரமப்பட்டு வந்துள்ளார்.

மூலக்கதை