புதிய உச்சம் தொட்ட இந்திய பங்குச்சந்தை
மும்பை,இந்திய பங்குச்சந்தை இம்மாத தொடக்கத்தில் கடும் சரிவை சந்தித்தது. அதன்பின்னர், இந்திய பங்குச்சந்தை உயரத்தொடங்கியது. இந்நிலையில், இந்திய பங்குச்சந்தை இன்று புதிய உச்சத்துடன் வர்த்தகமாகி வருகிறது. அதன்படி, சுமார் 120 புள்ளிகள் உயர்ந்த நிப்டி 25 ஆயிரத்து 925 என்ற புள்ளிகளில் புதிய உச்சம் தொட்டு வர்த்தகமாகி வருகிறது. அதேவேளை, சுமார் 150 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 53 ஆயிரத்து 986 என்ற புள்ளிகள் வரை சென்று வர்த்தகமாகி வருகிறது.சுமார் 300 புள்ளிகள் வரை உயர்ந்த சென்செக்ஸ் 84 ஆயிரத்து 881 என்ற புள்ளிகளில் புதிய உச்சம் தொட்டது. அதேபோல், சுமார் 100 புள்ளிகள் வரை உயர்ந்த பின்நிப்டி 24 ஆயிரத்து 898 என்ற புள்ளிகள் வரை சென்று வர்த்தகமாகி வருகிறது. அதேவேளை, சுமார் 200 புள்ளிகள் வரை உயர்ந்த பேங்க் எக்ஸ் 61 ஆயிரத்து 183 என்ற புள்ளிகள் வரை சென்று வர்த்தகமாகி வருகிறது. மேலும், 100 புள்ளிகள் வரை உயர்ந்த மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 238 என்ற புள்ளிகள் வரை சென்று வர்த்தகமாகி வருகிறது. இந்திய பங்குச்சந்தை புதிய உச்சம் தொட்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.